தியாகராய நகர் - Thiyagarayanagar

சென்னை: அதிமுகவை மிரட்டி கூட்டணி அமைத்தது பாஜக; செல்வப்பெருந்தகை

சென்னை: அதிமுகவை மிரட்டி கூட்டணி அமைத்தது பாஜக; செல்வப்பெருந்தகை

அதிமுக - பாஜக கூட்டணி இயற்கையான கூட்டணி அல்ல. அது ஒத்துக்கொள்ளாத கூட்டணி. ஒரு கட்டாயத்தின் பேரில் இந்தக் கூட்டணி அமைந்திருக்கிறது. எந்த நேரம் விரிசல் வரும், எந்த நேரம் தொண்டர்கள் புரட்சி செய்வார்கள் என்று சொல்ல முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இன்று (ஏப். 17) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது, பாஜகவின் புதிய தலைவர் நயினார் நாகேந்திரன், திமுகவும், காங்கிரஸ் கூட்டணியும் சரியான ஜோடிகள் என்று சொல்கிறார். அது உண்மைதான். மக்கள் நலப் பணிகளில், மக்களுக்காக குரல் கொடுக்கும் போராட்டங்களில், மதவாதிகளை எதிர்ப்பதில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சரியான ஜோடிதான். இந்துத்துவவாதிகளுக்கும், மதவாதிகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும், சனாதனவாதிகளுக்கும் எதிரானது திமுக, காங்கிரஸ். இவை எல்லா மக்களுக்குமான கட்சிகள். ஆனால் எல்லாருக்குமான கட்சி பாஜக என நயினார் நாகேந்திரன் சொல்லுவாரா?அதிமுக - பாஜக கூட்டணி இயற்கையான கூட்டணி அல்ல. அது ஒத்துக்கொள்ளாத கூட்டணி. ஒரு கட்டாயத்தின் பேரில் இந்தக் கூட்டணி அமைந்திருக்கிறது. எந்த நேரம் விரிசல் வரும், எந்த நேரம் தொண்டர்கள் புரட்சி செய்வார்கள் என்று சொல்ல முடியாது என்று அவர் கூறினார்.

வீடியோஸ்


சென்னை