சென்னை: திருமாவளவன் போல் ஆதவ் அர்ஜுனாவிடம் விஜய் ஏமாற கூடாது: பாஜக

51பார்த்தது
பாஜகவை இனியும் விமர்சித்தால் கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் சதுரங்கத்தில் ஆதவ் அர்ஜுனா செய்த சட்டவிரோத நடவடிக்கைகள், பணப்பரிமாற்றங்களை மக்களின் முன்னே வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அம்பலப்படுத்த வேண்டி வரும் என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ. என். எஸ். பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை மக்களை ஏமாற்றி கொள்ளையடித்த லாட்டரி பணத்தில் நடக்கும் விழாவில் உள்ள அரசியல் சூழ்ச்சியை நடிகர் விஜய் புரிந்து கொள்ள வேண்டும். அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளை கோட்பாடுகளை வாழ்வியல் நெறிகளை தமிழகம் முழுக்க கொண்டு செல்வதற்கு நல்லவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும். திருமாவளவன் ஏமாந்தது போல், விஜய்யும் ஏமாந்து விடக்கூடாது.  தமிழர்களின் உள்ளங்களிலும் தமிழகத்தின் இல்லங்களிலும் நல்லாட்சியை வழங்க கூடிய நம்பிக்கை நட்சத்திரமாக தாமரை சின்னமும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி வழங்கிய லட்சக்கணக்கான கோடி மக்கள் நலத் திட்டங்களும் வீற்றிருக்கின்றன. மக்கள் விரோத தீய சக்தி திமுகவின் கூட்டணியை வீழ்த்துகின்ற பணியை தமிழக பாஜக அமைக்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தளபதியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செவ்வனே தன் கடமையை செய்து முடிப்பார் என்று அவர் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி