வாக்காளர் பட்டியல் கோரியது மாநில தேர்தல் ஆணையம்

66பார்த்தது
வாக்காளர் பட்டியல் கோரியது மாநில தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் விதமாக, தலைமை தேர்தல் அதிகாரியிடம் சட்டப்பேரவை தொகுதி வாரியாக உள்ள வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, மாநில தேர்தல் ஆணைய செயலர் கே. பாலசுப்பிரமணியன் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: தமிழகத்தில் உள்ள உள்ளாட்சிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல்களை விரைவில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது. தற்போதுள்ள சட்டப்பேரவை வாக்காளர் பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சிகளுக்கான வாக்காளர் பட்டியலை ஓவ்வொரு ஆண்டும் அல்லது தற்செயலாக தேவைப்படும் காலங்களுக்கு தயாரிக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1-ம் தேதிகளில் தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் தற்போது சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதற்கேற்ப மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி