சென்னை: திரு. வி. க நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ. 81. 64 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய குடியிருப்பு பணிகளுக்கு அமைச்சர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்.
சென்னை திரு. வி. க. நகர் சட்டமன்ற தொகுதி - பெரியார் நகரில் 1975ஆம் ஆண்டு கட்டப்பட்ட குடியிருப்புகள் 48 ஆண்டுகளை கடந்துவிட்டன. எனவே, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ. 81. 64 கோடி மதிப்பில் 448 புதிய குடியிருப்புகளை அதே இடத்தில் கட்டுவதற்காக அமைச்சர் உதயநிதி இன்று அடிக்கல் நாட்டினார்.
மேலும் கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்து வீடுகளை உரிய காலத்தில் பயனாளிகளிடம் ஒப்படைக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.