சைதாபேட்டை - Saidapet

சென்னை: மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை.. செல்வப்பெருந்தகை கருத்து

சென்னை: மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை.. செல்வப்பெருந்தகை கருத்து

மோடி உருவாக்கிய பணமதிப்பு நீக்க பேரழிவு என்பது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மோசடியாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று, புழக்கத்தில் இருந்த ரூபாய் 500, ரூபாய் 1000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்து மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்தது இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகும். மோடி உருவாக்கிய பணமதிப்பு நீக்க பேரழிவு என்பது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மோசடியாகும். மக்களவையிலும், மக்கள் மன்றத்திலும் மக்களுக்காக குரல் கொடுக்கும் மகத்தான தலைவராக ராகுல்காந்தி செயல்பட்டு வருகிறார்.  மோடி தலைமையிலான ஆட்சியாளர்களுக்கு கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியா கூட்டணியை வலிமைப்படுத்துகிற சீரிய பணியில் தலைவர் ராகுல்காந்தி செயல்பட்டு வருகிறார். நாட்டு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. எனவே, பணமதிப்பிழப்பு போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள் எதையாவது அறிமுகப்படுத்த பிரதமர் மோடி முயல்வாரேயானால், தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி அதை முறியடித்து வெல்லும் என்பது உறுதியாகி வருகிறது. இதன்மூலம் புதிய நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


சென்னை