ஊராட்சி தலைவருக்கு அவமதிப்பு: திருமாவளவன் வலியுறுத்தல்

68பார்த்தது
பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ஊராட்சித் தலைவருக்கு நேர்ந்த அவமதிப்பு தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

திண்டிவனம் தாலுகா அவ்வையார்குப்பம் ஊராட்சித் தலைவர் மகாலட்சுமி, கடந்த 20-ம் தேதி மாலை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். தான் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சித்தலைவராகத் தேர்ந்தெடுக் கப்பட்ட நாளில் இருந்து அலுவலகத்தில் இருக்கையில் அமரவிடாமல் சிலர் தடுப்பதாகக் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி விசிகதலைவர் திருமாவளவன் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், திண்டிவனம் அருகே அவ்வையார்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் மகாலட்சுமியை, அவருக்கான இருக்கையில் அமரவிடாமல் அவரை அவமதித்தும், இழிவாகப் பேசியும் அவருக்கு மன உளைச்சல் கொடுப்பதாகக் கூறி சாதியவாதக் கும்பலின் மீது நட வடிக்கை கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்தி