இந்திய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் எப்படி இருக்கிறதோ அதுபோலத்தான் இந்தியாவில் உள்ள மாநகராட்சிகளுக்கெல்லாம் சென்னை மாநகராட்சி முன்மாதிரியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை, சென்னைக் குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் ரூ. 1,893 கோடியில் முடிவுற்ற 28 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 87 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, கடந்த 50 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி அடைந்துள்ள வளர்ச்சியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.
அந்தளவுக்கு மிகப்பெரிய வளர்ச்சியடைந்திருக்கிறது. சென்னை மாநகராட்சி வளர்ச்சியை திமுக அரசின் பங்களிப்பை தவிர்த்துவிட்டு எழுத முடியாது என தெரிவித்தார்.