கிண்டியில் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இதயம், நரம்பியல், மூளை, சிறுநீரகம் மற்றும் மயக்கவியல் பிரிவுகள் உட்பட 10 நவீன அறுவை சிகிச்சை அரங்குகளுடன் செயல்பட உள்ளது.
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 230 கோடி ரூபாயில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 51, 429 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் இதயம், நுரையீரல், நரம்பியல் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்துறை சிகிச்சைகள் மற்றும் 10 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.