அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால் தங்கத்தின் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது செப்டம்பர் 20ம் தேதியான இன்று தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து வட்டி விகித குறைப்பில் அமெரிக்கா ஈடுபடும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து தங்கத்தின் விலை மேலும் உயருவதற்கான வாய்ப்புகளே அதிகம். செப்டம்பர் 20ம் தேதியான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆபரண தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 60 அதிகரித்து ரூ. 6, 885 என்ற நிலையில் விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 6, 600 என்ற நிலையில் இருந்து ரூ. 6, 900த்தை நெருங்கி வருகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ. 55, 080 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் 55, 000க்கும் மேல் அதிகரித்துள்ளது.