பெரம்பூர் - Perambur

சென்னையில் கடந்த 8 மாதங்களில் 1, 679 சைபர் குற்ற புகார்கள்

சென்னையில் கடந்த 8 மாதங்களில் 1, 679 சைபர் குற்ற புகார்கள்

சைபர் குற்றங்கள் தொடர்பாக சென்னையில் கடந்த 8 மாதங்களில் 1, 679 புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ. 189 கோடிகளை பொதுமக்கள் இழந்துள்ளனர். எனவே, சைபர் குற்றவாளிகளிடம் சிக்கிக் கொள்ளாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல் ஆணையர் அறிவுரை வழங்கி உள்ளார். வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வந்த நிலையில், தற்போது இருந்த இடத்திலிருந்தே வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து மொத்த பணத்தையும் திருடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னையில் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பாக 1,679 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1,589 வழக்குகள் நிதி இழப்பு தொடர்பான சைபர் குற்றங்கள் ஆகும். இவற்றில் பல்வேறு மோசடிகளில் சுமார் ரூ. 189 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அவை ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி, பெடக்ஸ் கூரியர் மோசடி, ஸ்கைப் மோசடிகள், போலீஸ் அதிகாரி பெயரில் மோசடி, ஆன்லைன் பகுதிநேர வேலை மோசடி, திருமண மோசடி, பரிசு மோசடி என மோசடிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதுபோன்ற மோசடி வாயிலாக பொதுமக்கள் ஏமாறுவதைத் தடுக்கவும், மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சைபர் கிரைம் போலீஸாருக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

வீடியோஸ்


சென்னை
சென்னையில் கார் ஆலை மீண்டும் திறக்கப்படும்: ஃபோர்டு நிறுவனம்
Sep 14, 2024, 08:09 IST/துறைமுகம்
துறைமுகம்

சென்னையில் கார் ஆலை மீண்டும் திறக்கப்படும்: ஃபோர்டு நிறுவனம்

Sep 14, 2024, 08:09 IST
சென்னை மறைமலைநகர் கார் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதல்வர் மு. க. ஸ்டாலின், ஃபோர்டு நிறுவனத்தின் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். சென்னை மறைமலைநகரில் கார் உற்பத்தியை மீண்டும் துவக்க அவர் அழைப்பு விடுத்தார். ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் சர்வதேச சந்தைப்படுத்துதல் பிரிவின் தலைவர் கே.ஹார்ட் லிங்கிடுஇன் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஃபோர்டு கார் நிறுவனத்தை மீண்டும் இயக்குவதற்கான எங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் கடிதத்தை தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்துள்ளோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உடனான சந்திப்பு உள்பட தமிழக அரசுடன் பலமுறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஃபோர்டு ஆலைக்கான அவர்களின் தொடர்ச்சியான ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். புதிய உலகச் சந்தைகளுக்குச் சேவை செய்வதற்காக தமிழ்நாட்டின் உற்பத்தி நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். எங்கள் உலகளாவிய ஃபோர்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ் குழுவில் ஏற்கனவே 12,000 க்கும் அதிகமானோர் உள்ளனர். அடுத்த சில ஆண்டுகளில் மேலும் 2,500 முதல் 3,000 பணியாளர்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.