பெரம்பூர் - Perambur

சென்னையில் கடந்த 8 மாதங்களில் 1, 679 சைபர் குற்ற புகார்கள்

சென்னையில் கடந்த 8 மாதங்களில் 1, 679 சைபர் குற்ற புகார்கள்

சைபர் குற்றங்கள் தொடர்பாக சென்னையில் கடந்த 8 மாதங்களில் 1, 679 புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ. 189 கோடிகளை பொதுமக்கள் இழந்துள்ளனர். எனவே, சைபர் குற்றவாளிகளிடம் சிக்கிக் கொள்ளாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல் ஆணையர் அறிவுரை வழங்கி உள்ளார். வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வந்த நிலையில், தற்போது இருந்த இடத்திலிருந்தே வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து மொத்த பணத்தையும் திருடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னையில் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பாக 1,679 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1,589 வழக்குகள் நிதி இழப்பு தொடர்பான சைபர் குற்றங்கள் ஆகும். இவற்றில் பல்வேறு மோசடிகளில் சுமார் ரூ. 189 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அவை ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி, பெடக்ஸ் கூரியர் மோசடி, ஸ்கைப் மோசடிகள், போலீஸ் அதிகாரி பெயரில் மோசடி, ஆன்லைன் பகுதிநேர வேலை மோசடி, திருமண மோசடி, பரிசு மோசடி என மோசடிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதுபோன்ற மோசடி வாயிலாக பொதுமக்கள் ஏமாறுவதைத் தடுக்கவும், மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சைபர் கிரைம் போலீஸாருக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

வீடியோஸ்


சென்னை