வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: மழை பெய்ய வாய்ப்பு

70பார்த்தது
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: மழை பெய்ய வாய்ப்பு
வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகில், இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் வேகம் குறைந்து, பெரும்பாலான பகுதிகளில், கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்படுகிறது. எனினும் சில மாவட்டங்களில் மிதமான மழை தொடர்கிறது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் தெற்கு பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து, 5. 8 கி. மீ. , உயரத்தில் வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, மத்திய கிழக்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று, புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புகள் உள்ளன. இது, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா நோக்கி நகர வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி