எனது பிறந்தநாளுக்கு பிளக்ஸ், பேனர் வைப்பதையும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும்' என கட்சியினருக்கு துணை முதல்வர் உதயநிதி வேண்டுகோள் விடுத்தார்.
அழுத்தம் திருத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். எனது பிறந்த நாளை முன்னிட்டு பிளக்ஸ் பேனர் வைப்பது, பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். கொண்டாட விரும்பும் தோழர்கள் அதனை ஆக்கப்பூர்வமான மக்கள் பணிக்கும், கழகப்பணிக்கும் பயன்படுத்த வேண்டும். இதுவே என் பிறந்த நாள் வேண்டுகோள்.
எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கவே, விழி பிதுங்கிக் கொண்டிருக்கும் போது நாம் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான வேலைகளைத் துவங்கி விட்டோம். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று திராவிட மாடல் அரசு மீண்டும் அமைவதற்கான உறுதிமொழியை இந்த பிறந்த நாளில் என்னுடன் சேர்ந்து கழகத் தோழர்களும் ஏற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.