சென்னை: செல்போன் பறிப்பு; இருவர் கைது

75பார்த்தது
சென்னை: செல்போன் பறிப்பு; இருவர் கைது
உ. பி. , மாநிலத்தை சேர்ந்தவர் சிவசரண், 34. இவர், வாணுவம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், போக்குவரத்து மேலாளராக பணியாற்றுகிறார். கடந்த 1ம் தேதி, மடிப்பாக்கம், பரங்கிமலை - மேடவாக்கம் பிரதான சாலையில் உள்ள நுார் ராணி ஹோட்டல் அருகே பணியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது, பைக்கில் வந்த இருவர் சிவசரணின் மொபைல் போனை பறித்து தப்பினர். இது குறித்த புகாரின்படி, மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக குற்றவாளிகளை தேடினர். இதில், மொபைல் போன் வழிப்பறி செய்தது, கீழ்க்கட்டளையை சேர்ந்த பழைய குற்றவாளியான ஷாம்ராஜன், 19, நங்கநல்லூர், நான்காவது குறுக்குத் தெருவை சேர்ந்த பிரவீன்குமார், 28, என்பது தெரியவந்தது.

அவர்களை பிடித்து விசாரணை நடத்தி, மொபைல் போனை பறிமுதல் செய்தனர். பின், இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி