தொழிற்சாலை பணியாளர்களுக்கு மருத்துவ உதவி செய்ய நடவடிக்கை

71பார்த்தது
தொழிற்சாலை பணியாளர்களுக்கு மருத்துவ உதவி செய்ய நடவடிக்கை
சென்னையில் உள்ள பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்பு மற்றும் மருத்துவ உபகரணங்களை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். இதன்பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:
சென்னை பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழ்நாட்டில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பழமையான மருத்துவ கட்டமைப்பை கொண்டது. இந்த மருத்துவமனையின் இன்று ரூ. 25. 31 லட்சம் செலவில் புதிய வசதிகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிளஸ்டர் இருந்தால் மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஜே. என் 1. 1 கொரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இருப்பினும் இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி ஆகியோர் முக கவசம் அணிய வேண்டும். மக்களை தேடி மருத்துவமனை மூலம் 1 கோடியே 67 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். மக்களை தேடி மருத்துவம் மூலம் தொழிற்சாலையில் உள்ள பணியாளர்களுக்கு தேவையான மருத்துவ உதவி செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். அடுத்த வாரத்தில் இதனை தொடங்கி வைக்க இருக்கிறோம். இவ்வாறு கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி