அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா: எடப்பாடி பழனிசாமி மரியாதை

58பார்த்தது
சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவையொட்டி, அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் 267-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அவரது உருவசிலை மலர் மலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி, அழகு முத்துக்கோன் உருவப்படத்திற்கு மலர் தூவியும், பின்னர் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், கே. பி. முனுசாமி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அவர்களை தொடர்ந்து மற்ற கட்சி தலைவர்களும் மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி