தினமும் காவல் நிலையத்துக்கு வர விலக்கு கேட்டு இருக்கிறேன் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2 படம், ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறேன். மகனின் படிப்பும் பாதிக்கப்படுவதால் தினமும் காவல் நிலையத்துக்கு வர விலக்கு கேட்டு இருக்கிறேன். நல்லதே நடக்கும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.