முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆக. 22ஆம் தேதி ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்காக அனுமதி கோரப்பட்ட நிலையில், மத்திய அரசு 15 நாட்கள் அனுமதியளித்துள்ளது. இந்த பயணத்தின்போது கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்டோரை சந்தித்து பேசவுள்ளார். மேலும், வெளிநாடு பயணத்திற்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.