அக். 28 முதல் தீபாவளி சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனை: அரசு

55பார்த்தது
அக். 28 முதல் தீபாவளி சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனை: அரசு
தீபாவளி பண்டிகையைொட்டி, “கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்பு தொகுப்பு மளிகைப் பொருட்கள் விற்பனை வருகின்ற அக். 28 முதல் நடைபெறவுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீபாவளி பண்டிகையினை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ தமிழக அரசால் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, முதல்வரின் அறிவுரையின் படி, கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவைப்பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் “கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற பெயரில் மளிகைப்பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை அக். 28 முதல் நடைபெறவுள்ளது. தீபாவளி சிறப்புத் தொகுப்பு, பிரீமியம் மற்றும் எலைட் என இரண்டு வகையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  

“அதிரசம்-முறுக்கு காம்போ” தொகுப்பில் பச்சரிசி மாவு-500கிராம், பாகு வெல்லம்-500கிராம், ஏலக்காய்-5கிராம், மைதா மாவு-500கிராம், Sunland/Goldwinner Sunflower Oil -1/2லிட்டர் என 5 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ. 190 என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி