தமிழகத்தில் புதிய இணைப்பு, மீட்டர் சேவை கட்டணம் உயர்வு

69பார்த்தது
தமிழகத்தில் புதிய இணைப்பு, மீட்டர் சேவை கட்டணம் உயர்வு
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு அடிப்படையில், ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. யூனிட் ஒன்றுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 15-ம் தேதி முதல், புதிய இணைப்பு கட்டணம், மீட்டருக்கான வைப்புத் தொகை, பதிவு, மேம்பாட்டு கட்டணம் ஆகியவற்றுக்கான சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

இதன்படி, வீட்டு உபயோகம், குடியிருப்புகளுக்கான பொது மின்உபயோகம், அரசு கட்டிடங்கள், விசைத்தறி, தொழில் பிரிவுகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஒருமுனை மின் இணைப்புக்கு ரூ. 1, 020 ஆக இருந்த கட்டணம் ரூ. 1, 070 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ. 1, 535 ஆக இருந்தகட்டணம் ரூ. 1, 610 ஆகவும், 50கிலோவாட் முதல் 150 கிலோவாட் வரையிலான பயன்பாட்டுக்கு ரூ. 2, 045 ஆக இருந்த கட்டணம்ரூ. 2, 145 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், உயர் மின்அழுத்த இணைப்புகளுக்கான மீட்டர் வாடகை ரூ. 3, 780-ல் இருந்து ரூ. 3, 965 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி