எழும்பூர் - Egmore

தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவ. 3-ம் தேதி, தமிழகத்தில் ஒருசி இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நன்றி ஏஎன்ஐ

வீடியோஸ்


சென்னை
Nov 01, 2024, 13:11 IST/தியாகராய நகர்
தியாகராய நகர்

விஜய்யின் கருத்தை வரவேற்கிறோம்: செல்வப்பெருந்தகை

Nov 01, 2024, 13:11 IST
தவெக தலைவர் விஜய்யின் அதிகாரப்பகிர்வு கருத்தை வரவேற்கிறோம். இப்போது இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். இண்டியா கூட்டணியில் எந்த சலனமும், சங்கடமும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தவெக தலைவர் விஜய்யின் அதிகாரப்பகிர்வு கருத்தை வரவேற்கிறோம். இப்போது இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். இண்டியா கூட்டணியில் எந்த சலனமும், சங்கடமும் இல்லை. 2004 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட்டது. அதிகாரப்பகிர்வு குறித்த தொண்டர்களின் உணர்வுகளை கட்சி தலைமைக்கு கொண்டு செல்வோம். தமிழகத்தில் தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழிபிறக்கும். தமிழகத்தில் வருங்காலங்களில் ஆட்சியில் பங்கு அளிப்பது குறித்து மக்கள் தான் முடிவு செய்வார்கள். தமிழகத்தில் பெருந்தலைவர் ‌காமராஜர் கட்சி அமைய வேண்டும். அதை நோக்கிதான் எங்கள் பயணம் இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை மத்திய அரசு அமல்படுத்தினால் நாட்டில் புரட்சி ஏற்படும் என அவர் கூறினார்.