எழும்பூர் - Egmore

தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,  நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவ. 4ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவ. 5ம் தேதி முதல் நவ. 7ம் தேதி வரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவ. 8ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வீடியோஸ்


சென்னை
சென்னை: தனியார் நிறுவனத்துக்கு ரூ. 566 கோடி அபராதம்: அமலாக்கத்துறை
Nov 03, 2024, 05:11 IST/அண்ணா நகர்
அண்ணா நகர்

சென்னை: தனியார் நிறுவனத்துக்கு ரூ. 566 கோடி அபராதம்: அமலாக்கத்துறை

Nov 03, 2024, 05:11 IST
சென்னை தனியார் நிறுவனத்துக்கு ரூ. 566 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையைச் சேர்ந்த ஜிஐ ரீடெயில் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் முறைகேடாக பங்குகளை விற்பனை செய்து அதன்மூலம் கிடைத்த ரூ. 195 கோடியை மறைத்து அத்தொகையை ஐக்கிய அரபு நாடுகளில் இந்தியர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் நிறுவனத்தில் மறைமுகமாக முதலீடு செய்திருப்பதாக அமலாக்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அமலாக்கத் துறைஇயக்குநரக தென்மண்டல அதிகாரிகள் அந்நிறுவனத்தில் சோதனை நடத்தியபோது அந்தத் தகவல் உண்மைதான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்நிறுவனத்துக்கு சொந்தமான ரூ. 195 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை அரசுடமையாக்க அமலாக்கத் துறை விசாரணை ஆணையம் உத்தரவிட்டது. மேலும் அந்நிறுவனத்துக்கு ரூ. 566. 5 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது.