எழும்பூர் - Egmore

பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை அதிகரிக்க கோரிக்கை

பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை அதிகரிக்க கோரிக்கை

பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று டிஆர்பி தேர்வெழுதியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் பதவிகளில் காலியாகவுள்ள 3, 192 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி போட்டித் தேர்வை நடத்தியது. இதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற பிஎட் பட்டதாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் 41, 185 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 40, 136 பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் மே 18 மற்றும் 22-ம் தேதிகளில் வெளியிடப்பட்டன. ஒரு காலியிடத்துக்கு ஒன்றே கால் பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இத்தேர்வெழுதி நல்ல மதிப்பெண் பெற்றும் காலியிடங்கள் குறைவால் பணிவாய்ப்பு பெற முடியாத தேர்வர்கள் சுமார் 100 பேர் நேற்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ். கண்ணப்பனை சந்தித்து காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை விடுத்தனர்.

வீடியோஸ்


சென்னை
குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி மோசடி
Aug 21, 2024, 02:08 IST/வேளச்சேரி
வேளச்சேரி

குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி மோசடி

Aug 21, 2024, 02:08 IST
ஜாபர்கான்பேட்டை கண்ணகி தெருவை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் செல்போனில் தனிநபர் கடன் வேண்டுமென்றால் இந்த நம்பரை அணுகவும் என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த எண்ணை அருணாச்சலம் தொடர்பு கொண்டு பேசிய போது குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என கூறி 6 தவணைகளாக ரூ. 1, 24, 993 வங்கி கணக்கின் மூலம் செலுத்தியுள்ளார். மீண்டும் அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது பதிலளிக்காததால் இழந்த பணத்தை மீட்டு தருமாறு எம். ஜி. ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.