தொழில் வழிகாட்டி நிறுவன அலுவலகத்துக்கு முதல்வர் சென்றார்

52பார்த்தது
தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவன அலுவலகத்துக்கு இன்று சென்ற முதல்வர் மு. க. ஸ்டாலின், 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதே நமது இலக்கு என அங்குள்ள தகவல் பலகையில் எழுதி வலியுறுத்தினார்.

தமிழக அரசின் தொழில்துறையின் கீழ், தமிழகத்தில் முதலீடு செய்யும், விரிவாக்கத்தை மேற்கொள்ளும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனுமதி உள்ளிட்ட உதவிகளை வழங்கும் வகையில், தொழில் வழிகாட்டி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் அலுவலகம், சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ளது. இன்று தலைமைச் செயலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திரும்பிய முதல்வர் மு. க. ஸ்டாலின், வழியில் வழிகாட்டி நிறுவன அலுவலகத்துக்குச் சென்றார்.

அங்கு முதல்வரை தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா மற்றும் அலுவலர்கள் முதல்வரை வரவேற்றனர். அங்கு பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் அலுவலர்களுடன் முதல்வர் உரையாடினார். முதல்வர் அங்கிருந்து புறப்படும் முன்னதாக, அங்குள்ள தகவல் பலகையில், ‘50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நமது இலக்கு’ என எழுதி கையொப்பமிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி