பழைய ஓய்வூதிய திட்டம் - எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலர் கருத்து

60பார்த்தது
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஒரு தொடக்கமே. தொடர்ந்து, பழைய பென்சன் திட்டத்தில் இருந்த நிலையை அடைய முயற்சி எடுப்போம் என்று கண்ணையா கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசய அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவரும், எஸ். ஆர். எம். யூ பொதுச் செயலாளருமான கண்ணையா, தற்போது, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் கொடுத்து உள்ளனர். ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் சேர்ந்தோருக்கு 25 ஆண்டு சேவை முடிந்து, ஓய்வு பெறும்போது, அவர்களுக்கு கடைசி 12 மாத அடிப்படை சம்பளத்தில் சராசரியில் 50 சதவீதம் ஓய்வூதியமாக தரப்படும். இவர்களுக்கு மத்திய அரசு தரும் பங்களிப்பு தொகை 14 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படும். இந்த பென்சன் திட்டம் ஒரு தொடக்கம் ஆகும். சிலருக்கு வேறுபட்ட கருத்து இருக்கலாம். தொடர்ந்து, பல கட்ட நடவடிக்கை மேற்கொண்டு படிப்படியாக மாற்றுவோம். கடைசியில், பழைய பென்சன் திட்டம் என்ன நிலையில் இருந்ததோ, அதே நிலைக்கு கொண்டுவருவோம் என தெரிவித்தார்.

தற்போது மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ள உத்தரவாத பென்ஷன் திட்டத்தில் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்பான 10 சதவீதத்தை நீக்கும் வரையிலும், பழைய பென்ஷன் திட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்களை உத்தரவாத பென்ஷன் திட்டத்தில் நிறைவேற்றும் வரையிலும் தொடர்ந்து மத்திய அரசு மற்றும் ரயில்வே தொழிலாளர்களை ஒன்றிணைத்து போராடி வெல்வோம் என கூறினார்.

தொடர்புடைய செய்தி