நகரும் படிக்கட்டுகள் இயங்கவில்லை: ரயில் பயணிகள் பாதிப்பு

58பார்த்தது
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 4, 5மற்றும் 10 ஆகிய நடைமேடைகளில் உள்ள நகரும் படிக்கட்டுகள் பயணிகளுக்கு பயனற்ற முறையில் இருப்பதால், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் அவதிப்படுகின்றனர்.

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் இங்கிருந்து தான் புறப்படுகின்றன. அதுபோல, தென் மாவட்டங்களில் இருந்து இந்த ரயில்கள் புறப்பட்டு, சென்னை எழும்பூருக்கு வந்தடைகின்றன.

இந்த ரயில் நிலையத்தை உலக தரத்தில் மேம்படுத்தும் விதமாக, ரூ. 735 கோடியில் மறுசீரமைப்பு பணி கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணி ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற, மறுபுறம் ரயில்களின் சேவை வழக்கம்போல இயக்கப்படுகின்றன. அதேநேரத்தில், ரயில் நிலையத்துக்குள் பயணிகள் வந்து செல்ல போதிய வசதி இல்லாததால், கடும் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக, நகரும் படிக்கட்டுகள் பயனற்றதாக இருக்கிறது. ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் 2-வது நுழைவு வாயிலை ஒட்டி, ஒரு நகரும் படிக்கட்டு நெடுங்காலமாக இருக்கிறது. இந்த நகரும் படிக்கட்டில் ஏறி, 5-வது நடைமேடை முதல் 10-வது நடைமேடை வரை செல்ல முடியும்.

5 மற்றும் 6-வது நடைமேடைகளுக்கு இடையே ஒரு நகரும் படிக்கட்டு நெடுங்காலமாக இயங்காமல் உள்ளது. இதுபோல, 10, 11-வது நடைமேடைகளுக்கு இடையே உள்ள நகரும் படிக்கட்டும் இயங்காமல் உள்ளது. இதனால், பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி