சென்னையில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. குற்றங்களின் தன்மை கருதி வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரெட் அலர்ட், மஞ்சள் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் என வகைப்பாடு பிரிக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட், மஞ்சள் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் என மைக்கில் சொன்னவுடன் உடனே சோதனையிட செல்ல வேண்டும்.
காவல் நிலைய எல்லைகளிலும் 4 இடங்களில் வாகன தணிக்கை நடத்த போலீசாருக்கு அறிவுறுத்தல். காவல் நிலையங்களில் குழு அமைத்து சென்னை காவல் ஆணையர் அருண் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ரெட், மஞ்சள் அலர்ட் சேர்ந்து வந்தால் லாட்ஜ்களிலும் சோதனை நடத்த வேண்டும் என அறிவுறுத்தல். பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் நடமாட்டத்தை கண்காணிப்பது ரெட் அலர்ட் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரவு வந்தவுடன் காவல் நிலையங்களில் உள்ளவர்கள் 4 முக்கிய சந்திப்புகளில் வாகன தணிக்கை செய்ய வேண்டும். ரவுடிகள், முக்கிய பிரமுகர்கள் கொலை, பெரிய அளவில் நகை கொள்ளை சம்பவங்கள் நடந்தால் 3 இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும். குற்றவாளிகள் தப்பிக்கும் வழிகள் என ஏற்கனவே கண்டறியப்பட்ட 3 இடங்களில் வாகன தணிக்கை செய்வது மஞ்சள் அலர்ட். செயின், செல்போன் பறிப்பு நடந்தால் குற்றவாளிகள் தப்பிக்கலாம் என கருதப்படும் 3 முக்கிய சந்திப்புகளில் வாகன தணிக்கை செய்வது ஆரஞ்சு அலர்ட். ரெட், மஞ்சள் அலர்ட் சேர்ந்து வந்தால் காவல் நிலைய எல்லைகளில் உள்ள லாட்ஜ்களிலும் சேர்த்து சோதனையிட வேண்டும்