கொடுங்கையூர்: கஞ்சா விற்ற பெண் கைது
கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, டி. வி. கே. லிங்க் சாலை பகுதியில், கொடுங்கையூர் போலீசார் நேற்று, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், செங்குன்றம், மகாவீர் கார்டனை சேர்ந்த ரமேஷ், (40), மாதவரம் ஜானகிராமன், (32), செங்குன்றம் ஹரி, (30), வியாசர்பாடி பிரசாந்த், (31), பெரம்பூர் ராஜேஷ்குமார், (41), சிந்தாதிரிப்பேட்டை கருணாகரன், (34), ஆவடி ஸ்ரீதர், (24), புதுகும்மிடிப்பூண்டி நதியா, (34), ஆகியோர் என்பது தெரியவந்தது. போலீசார், எட்டு பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 22 கிலோ கஞ்சா, 'ஷிப்ட்' கார், போலியான நம்பர் பிளேட் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.