பெரும்பாக்கம், சவுமியா நகரை சேர்ந்த (75) வயதுடைய இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி, சாலையில் நடந்து சென்றபோது, அங்கு சுற்றித் திரிந்த மாடு திடீரென அவரை முட்டியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். முதியவரை மாடு முட்டும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைராகப் பரவியது. இதையடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிக்க தாம்பரம் மாநகர காவல் ஆணையர் பெரும்பாக்கம் காவல்நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில், போலீசார், பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து நேற்றுமுன்தினம் இரவு பெரும்பாக்கம் சாலைகளில் சுற்றித் திரிந்த 30 மாடுகளைப் பிடித்து பெரும்பாக்கம், மேட்டுத் தெருவில் உள்ள சமூக நலக்கூட வளாகத்தில் அடைத்து வைத்தனர். பின்னர், மாட்டுஉரிமையாளர்களிடம் தலா ரூ. 2000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.