பொதுப்பணித் துறை வளாகத்தில் டெங்கு பரவும் அபாயம்

59பார்த்தது
பொதுப்பணித் துறை வளாகத்தில் டெங்கு பரவும் அபாயம்
சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித் துறை வளாகத்தில் பழுதடைந்து சிதைந்த நிலையில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களால் சுகாதாரக் கேடு மட்டுமல்லாமல் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித் துறை வளாகத்தில் பொதுப்பணித் துறை (கட்டிடம்), நீர்வள ஆதாரத் துறை, அதன் துணை அலுவலகங்கள், பிற துறை அலுவலகங்கள் ஏராளமாக உள்ளன.

இந்த வளாகத்துக்கு அரசு பணியாளர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் பழுதடைந்து, சிதைந்த நிலையில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


அவற்றின் மீதும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தும், இலைகள் உதிர்ந்தும் குப்பையாக காட்சியளிக்கிறது. அந்த வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் புதர்மண்டிக் கிடக்கிறது.

அதனால் அங்கே தேள், பூரான் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடமாட்டம் இருப்பதாக அங்குள்ளவர்கள் அச்சத்துடன் கூறுகின்றனர். அந்த இடத்தின் அருகில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை ஊழியர் சங்கமும், தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை மின் பணியாளர்கள் சங்கமும் உள்ளது.

தொடர்புடைய செய்தி