சென்னை அசோக் நகரில் சாலையோரம் இருந்த மழைநீர் கால்வாயில் விழுந்த நபர் உயிரிழந்தார். உயிரிழந்த நபர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஐயப்பன் என்பது தெரியவந்துள்ளது. மழைநீர் கால்வாயில் விழுந்து இறந்த ஐயப்பனின் உடலை மீட்டு மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உரிய வழிமுறைகளை பின்பற்றாமல் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.