சென்னை: எழும்பூர் தொகுதிக்குட்பட்ட வேம்புலி அம்மன் கோவில் தெரு திட்டப்பகுதியில் ரூ. 32. 63 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள குடியிருப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்.
சென்னை எழும்பூர் தொகுதிக்குட்பட்ட வேம்புலி அம்மன் கோவில் தெரு திட்டப்பகுதியில், 49 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 144 குடியிருப்புகளை அகற்றிவிட்டு, அவற்றுக்கு பதிலாக 188 புதிய குடியிருப்புகள் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ரூ. 32. 63 கோடி மதிப்பில் தலா 416 சதுர அடியில் புதியக்குடியிருப்புகள், இன்னும் 18 மாதங்களில் கட்டப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் பணி இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.