சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய உறுதியேற்போம் என வக்கீல் அணி ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் வக்கீல் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வக்கீல் அணி தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு, அதிமுக சூறையாட நினைத்த துரோகிகள், எதிரிகளிடம் இருந்து சட்டப்
போராட்டம் மூலம் காத்து, அ. தி. மு. க. வை வலுவான ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வந்து,
2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கமாக மாற்றி, மதுரை மாநகரே குலுங்கும் வகையில் பிரமாண்டமான மாநாட்டை நடத்திக் காட்டி,
அரசியல் அரங்கில், தொண்டர்களை தலை நிமிர்ந்து நடக்கச் செய்திட்ட பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, வழக்கறிஞர் பிரிவு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய உறுதியேற்போம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.