என் வாழ்வில் திருப்புமுனையை தந்தது மதுரை: முதல்வர் பெருமிதம்

66பார்த்தது
என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திமுக இளைஞரணி தொடங்கப்பட்டதும் இந்த மதுரை மண்ணில் இருந்துதான் என்று மாமதுரை தொடக்க விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். மதுரை நகரின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் வகையில் மாமதுரை விழா இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்தது. முதல்வர் மு. க. ஸ்டாலின், சென்னை முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாமதுரை விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநகராட்சி மேயர் இந்திராணி, எம். பி. , சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் தளபதி, பூமிநாதன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு. க. ஸ்டாலின், திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும் என்று சிலப்பதிகாரம் தீட்டிய இளங்கோவடிகள் எழுதினார். இப்போது, மா மதுரை போற்றுவோம், மா மதுரை போற்றுவோம் என்று வேள்பாரி தீட்டிய எழுத்தாளர் சு. வெங்கடேசன் எம். பி இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.

தொடர்புடைய செய்தி