தமிழக பட்ஜெட்டை வரவேற்றது ஏன்? - பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

53பார்த்தது
தேமுதிக தேர்தல் அறிக்கையின் அம்சங்கள் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றதால், அதை வரவேற்றோம். வேறு அரசியல் காரணம் இல்லை என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவின் 2006-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அம்சங்களைதான் தற்போது திமுக தனது பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளது. அதனால்தான் அதை ஆதரித்து வரவேற்கிறோம். இதில் எந்தவிதமான அரசியலும் கிடையாது. ஒரு நல்ல விஷயம் நடந்தால் ஆதரிக்கிறோம். தவறு நடந்தால் அதை சுட்டிக்காட்டுகிறோம். மும்மொழி கொள்கையை பொருத்தவரை தாய்மொழி காப்போம். அனைத்து மொழிகளையும் கற்போம் என்று விஜயகாந்த் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்த வழியில் தான் நாங்கள் பயணிக்கிறோம்.

தமிழகம் முழுவதும் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் என்பதை அரசுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன். தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் ஒரு தொகுதியை மத்திய அரசு குறைத்தால் கூட மக்களுக்காக தமிழக அரசுடன் இணைந்து அதை எதிர்ப்போம். மேலும், மாநிலங்களவை சீட் தொடர்பாக மீண்டும், மீண்டும் அதே கேள்வியை கேட்கிறீர்கள். இதற்கான பதிலை நான் பல்வேறு இடங்களில் சொல்லிவிட்டேன். அதேபோல், தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. அடுத்த ஆண்டு பிறந்த நாளில் கூட்டணி குறித்து உறுதியாக அறிவிக்கிறேன் என அவர் பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி