மிலாடி நபி, தொடர் விடுமுறை: 1, 515 பேருந்துகள் இயக்க ஏற்பாடு

59பார்த்தது
மிலாடி நபி, தொடர் விடுமுறை: 1, 515 பேருந்துகள் இயக்க ஏற்பாடு
மிலாடி நபி மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 1, 515 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர். மோகன் இன்று(செப்.12) வெளியிட்ட செய்திக்குறிப்பில், செப். 14 (சனிக்கிழமை), செப். 15 (ஞாயிற்றுக்கிழமை, முகூர்த்தம்), செப். 17 (மிலாடி நபி) என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, செப். 13, 14 தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 955 பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 350 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 1, 515 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேருந்துகளை www. tnstc. in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி