புதிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க கூடாது: காவல் ஆணையர்

60பார்த்தது
புதிய இடங்களில் சிலைகள் வைக்கக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல் ஆணையராக நான்பொறுப்பேற்ற பிறகு ரவுடிகள் ஒழிப்பில் கவனம் செலுத்தினேன். பலரவுடிகள் சென்னையை விட்டு ஓடிவிட்டனர். எனது நடவடிக்கைக்கு பலன் கிடைத்துள்ளதாக கருதுகிறேன்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளோம். இந்த வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலையும் விரைவில் கைது செய்வோம். இந்த வழக்கில் கைதாகி உள்ள நபர்களின் வங்கிக் கணக்குகள், சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை இறுதிகட்டத்துக்கு வந்துள்ளது. வழக்கு விவரங்கள் குறித்த விரிவான தகவல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என கூறினார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த ஆண்டு எண்ணிக்கையின்படியே இந்த ஆண்டும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. புதிய இடங்களில் சிலைகள் வைக்கக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி