ஆவடி - Aavadi

திருவள்ளூர்: நரிக்குறவ இன மக்கள் மறியல் போராட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு மோசடியாக 45 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.  திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு பகுதியில் கடந்த 1971 ஆம் ஆண்டு பூமிதான திட்டத்தின் கீழ் முன்னாள் எம்பி எம்எல்ஏ ஒரக்காடு கோவிந்தராஜூலு நாயுடு முயற்சியில் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த நரிக்குறவர் மக்களுக்கு வழங்கப்பட்ட 45 ஏக்கர் நிலத்தை பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தின் உதவியுடன் போலி பட்டா போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.  சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நரிக்குறவ இன மக்கள் பெண்கள் குழந்தைகளுடன் நூற்றுக்கணக்கானோர் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.  காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా