யூடியூபில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பற்றி அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கரை கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இதுவரை, 5 வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சவுக்கு சங்கர், யூடியூபில் பசும்பொன் தேவரை பற்றி அவதூறாக பேசியது காரணமாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று இரவு சங்கரை கைது செய்தனர். பின்னர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.