மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப்., 10) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், கரூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.