கேரளாவில் மீண்டும் மழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சவுராஷ்டிரா கட்ச் பகுதியில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை இன்று அரபிக்கடலை சென்றடைவதால் கேரளாவில் மழை தீவிரம் அடையும். அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 30ஆம் தேதி ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும், செப்டம்பர் 1ஆம் தேதி கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது.