கஸ்டமர் போல் நடித்து செல்போன் திருட்டு

62பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பஜார் வீதியில் இயங்கி வரும் செல்போன் கடையில் கடந்த 27ஆம் தேதி கஸ்டர் ஒருவர் வந்துள்ளார். அங்கு, செல்போனில் பேசுவது போல் நடித்த அந்நபர், கடை ஊழியர் அசந்த நேரம் பார்த்து கடையில் இருந்த புதிய செல்போனை திருடிவிட்டு அங்கிருந்து தப்பினார். பின்னர், செல்போன் திருடுபோனதை அறிந்த கடை ஊழியர், உடனடியாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர். இதுகுறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி