மருது சகோதரர்களுக்கு சிலை.. அமைச்சர் அறிவிப்பு

68பார்த்தது
மருது சகோதரர்களுக்கு சிலை.. அமைச்சர் அறிவிப்பு
வீரமங்கை வேலுநாச்சியாருக்கு ரூ. 50 லட்சத்தில் சென்னை காந்தி மண்டபத்தில் திருவுருவச்சிலை.
ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் திருவுருவச்சிலை.
முதன் முதலில் அச்சு எந்திரத்தை நிறுவி தமிழுக்குப் பெருமை சேர்த்த சீகன் பால்குவுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம். ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் சிந்து சமவெளி நாகரீகத்தை உலகிற்கு அறிவித்த சர். ஜான் மார்ஷல் அவர்களுக்கு சென்னையில் திருவுருவச்சிலை. ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஜி.டி நாயுடுக்கு கோவையில் சிலை அமைக்கப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி