பள்ளி மாணவர்களிடையே மது அருந்துவதை ஊக்குவித்ததாக கர்நாடகாவின் மங்களூருவில் பார் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக Lalbagh Inn பாரில் சில மாணவர்கள் இரவு பார்ட்டி கொண்டாடியுள்ளனர். அதில் கல்வி நிறுவனத்தின் அடையாள அட்டையுடன் வந்த மாணவிகளுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பு ஆஃபர்களை வழங்கி 15 சதவீத தள்ளுபடியும் கொடுத்துள்ளனர். இதையறிந்த கலால்துறையினர் சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.