ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாக மல்யுத்தத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத்தின் மனுவை விளையாட்டு நடுவர் நீதிமன்றம் (CAS) விசாரித்தது. தற்போது CAS வாதங்கள் முடிந்து விட்டதாக தெரிகிறது. ஒலிம்பிக் போட்டிகள் முடிவதற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என CAS அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே இந்த முடிவு வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.