சென்னை அடையாறில் தேசிய ஆடை வடிவமைப்பு கல்லூரி இணை பேராசிரியர் நித்யா என்பவர் தனது காரை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த கொள்ளையர்கள் கார் கண்ணாடியை நூதன முறையில் உடைத்து உள்ளே இருந்த லேப்டாப், மொபைல் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவியை ஆராய்ந்தனர். பின்னர், கொள்ளை நடைபெற்ற பாணியை வைத்து இது திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.