லாரி மீது கார் மோதி விபத்து - 10 பேர் பலி

72பார்த்தது
லாரி மீது கார் மோதி விபத்து - 10 பேர் பலி
குஜராத் மாநிலம் அகமதாபாத் - வதோதரா நெடுஞ்சாலையில் இன்று (ஏப்ரல் 17) நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 2 பேர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தனர். தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்தும், விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி