இனி செல்ஃபோன் பேச டவர் தேவை இல்லை

62பார்த்தது
இனி செல்ஃபோன் பேச டவர் தேவை இல்லை
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சீனா ’விண்வெளியுடன் இணைத்தல்’ என்ற பெயரில் Tiantong -1 என்ற செயற்கை கோளை அனுப்பி செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாகச் செயற்கைக்கோள் மூலமாக செல்ஃபோனில் பேசும் வசதியை கொண்டு வர ஆய்வு மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் அதில் வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளது. இதன்மூலம் ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. செயற்கை கோள் மூலம் நேரடியாக பேச முடியும் என்பதால் நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும் செல்ஃபோனில் தொடர்புகொள்வது தடைபடாது.

தொடர்புடைய செய்தி