‘கேப்டன் மில்லர்’ பட புதிய அப்டேட்

557பார்த்தது
‘கேப்டன் மில்லர்’ பட புதிய அப்டேட்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் தாங்கல் மண்டலத்தில் நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் ஜூன் மாத இறுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி