பச்சை முட்டை சாப்பிடுவது சில உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முட்டையை பச்சையாக சாப்பிடுவதால் இரைப்பை குடல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், வயிற்று வலி, தசைப்பிடிப்புகள், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வீக்கம், வாயு, செரிமான பிரச்சனை, சுவாச பிரச்சனை மற்றும் படை நோய் ஆகியவற்றை ஏற்படுத்தும். ஆகையால், முட்டையை சமைத்து சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது என்று அறிவுறுத்துகின்றனர்.